21-ம்  நூற்றாண்டு பா.ஜ.க வசம் வரட்டும20-ம் நூற்றாண்டு காங்கிரசின் வசம் இருந்ததுபோகட்டும்; 21-வது நூற்றாண்டு பா.ஜ.க வசம் வரட்டும என்று பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியுள்ளார்.

மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து ராஜ்நாத்சிங் மேலும் பேசியதாவது:

2013-14 நிதி யாண்டுக்கான மத்தியஅரசின் பட்ஜெட்டால் சாதாரண மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை. இந்தபட்ஜெட்டால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது மக்களுக்கிருந்த சிறிதளவு நம்பிக்கையும் போய் விட்டது.

தவறான ஆளுகை, ஊழல்நிர்வாகம், பொறுப்பற்ற பொருளாதார மேலாண்மை போன்றவற்றால் இந்தியாவின் நற்பெயருக்கு உலகஅரங்கில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில் வளர்ச்சிவிகிதம் பத்து சதவீதத்துக்கும் மேலாக இருக்கிறது . அதனால் தான் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளது என்றார்.

Leave a Reply