193 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐநா.சபையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி , 'மனதையும்-உடலையும், சிந்தனையையும்-செயலையும், கட்டுப் பாட்டையும்- மன நிறைவையும், மனிதரையும்-இயற்கையையும் ஒன்றிணைத்து, ஆரோக்கியம் மற்றும் சுக வாழ்வுக்கு நலம்பயக்கும் யோகா கலையை உலகம்முழுவதும் பரப்பும்வகையில் ஒவ்வொரு ஆண்டின் ஜூன் மாதம் 21ம் தேதியையும் சர்வதேச யோகாதினமாக அறிவிக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி , 'இந்தியாவின் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகாதினமாக ஆண்டின் ஒரு தேதியை ஐக்கிய நாடுகள்சபை அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, இந்தியாவுக்கான ஐ.நா.சபையின் நிரந்தர தூதரகத்தின் வாயிலாக வடிவமைக்கப் பட்டுள்ள மாதிரிவரைவு அறிக்கையின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பிறகு 130 நாடுகள் ஜூன் மாதம் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க ஒப்புதல் தந்தன.

இந்நிலையில், ஜி-20 நாடுகளில் பங்கேற்பதற்காக மியான் மரில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடியை சந்தித்த ஐரோப்பிய யூனியனின் பிரதமர் ஹெர்மன் வான்ராம்புய் 'சர்வதேச யோகா தினம் தொடர்பான உங்களது முன் முயற்சியை ஐரோப்பிய யூனியன் ஆதரிக்கின்றது' என்று தெரிவித்தார்.

28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியனும் சர்வதேச யோகாதினம் தொடர்பான மோடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ள்ளதால், 193 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா. சபையில் இந்தகருத்துக்கு 158 நாடுகள் ஆதரவு தந்துள்ளன என்பதால் அடுத்த (2015) ஆண்டிலிருந்து ஜூன் மாதம் 21ம் தேதியை சர்வதேச யோகாதினமாக ஐ.நா.சபை விரைவில் அறிவிக்கும் என்றும், இது சர்வதேசளவில் மோடியின் கருத்துக்கும், செல்வாக்குக்கும் கிடைத்த வெற்றியாகும்.

Leave a Reply