பாஜக.வின் பாராளுமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் இன்று நடந்தது . இந்தகூட்டத்தில் சமீபத்தில் வெற்றிபெற்ற குஜராத் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான முதல்வர்களை தேர்வுசெய்தல், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, குஜராத் மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாஜக. எம்பிக்கள் பலர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில் வெற்றிபெற்றதற்கு அந்தந்த மாநில எம்.பி.க்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.  

அப்போது அவா் பேசுகையில், இந்திராகாந்தி தலைமையில் காங்கிரஸ் 18 மாநிலங்களில் ஆட்சிசெய்து கொண்டிருந்தது. ஆனால் பாஜக. தற்போது 19 மாநிலங்களில் ஆட்சிபுாிகிறது என்று கூறிய மோடி, எதிா்க் கட்சியினாின் தவறான பிரசாரத்தைகண்டு அஞ்சவேண்டாம் என்று பாஜக.வின் தொண்டா்களையும், தலைவா்களையும் அவா் கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து பிரதமா் மோடி பேசும் போது மக்கள் ஆதரவை பாஜக. பெறுவதற்கு கட்சித்தொண்டா்கள், தலைவா்கள் செய்த போராட்டத்தையும், தியாகத்தையும் நினைவுக்கூா்ந்த போது 3 முறை கண்ணீரை அடக்கிக் கொண்டு உரையைத் தொடா்ந்தாா்.

ஆனால் மகரந்த் தேசாய், அர்விந்த் மனியாா், வசந்த்ராவ் கஜேந்திர கட்கா் ஆகியோா் கட்சியை வளா்க்க பாடுபட்டதை நினைவுக் கூா்ந்த போது உணா்ச்சிவசப் பட்டதால் அவா் கண்களில் கண்ணீா் வந்தது. பிரதமா் மோடியின் இந்தநெகிழ்ச்சி உரை தொண்டா்களை வெகுவாக ஈா்த்தது.

 

Leave a Reply