அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றும் போது, யோகாவின் பயன்கள் குறித்து விரிவாக விளக்கினார். இதை தொடர்ந்து, வரும் ஆண்டு முதல் ஜூன் 21&ம் தேதி சர்வதேச யோகாதினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 5 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மன அழுத் தங்களை போக்குவதற்கு உடல், மனம் மற்றும் ஆன்மிக பயிற்சியாக யோகா சனம் பயன்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மனிதனின் மன அழுத்தங்கள் அகல்வதுடன், பல்வேறு உடல் உபாதைகளும் நீங்குகின்றன. அத்துடன், அவர்கள் நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.

இந்தியாவில் பின்பற்றப்படும் இத்தகைய யோகாசன சிறப்புகள்குறித்து கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விளக்கினார். இதனை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 175 நாடுகள் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், சர்வதேச அளவில் யோகாசனம் குறித்து விழிப் புணர்வை கொண்டு வருவதற்காக கடந்த 9&ம் தேதி ஐ.நா. பொது சபையின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 175 நாடுகளின் தலைவர்கள் ஆதரவுதெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, சர்வதேச அளவில் ஜூன் 21ம் தேதியை யோகாசன தினமாக கொண்டாடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இத்தகைய சிறப்புமிக்க யோகா சனத்தை உலகளவில் எடுத்துரைத்ததற்காக இந்தியபிரதமர் நரேந்திர மோடியை அனைத்து தலைவர்களும் பாராட்டியதாக ஐ.நா.வின் நிரந்தர இந்திய பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி இன்று நியூயார்க்கில் கூறினார்.

Leave a Reply