இன்று பிஜேபியை தூற்றும் டுமிளனுக்கு வரலாறும் தெரியாது, அரசியலும் தெரியாது, தேசம் சுதந்திரம் அடைய பாடுபட்ட எண்ணற்ற தமிழர்களை தெரியாது, இரண்டாவது சுதந்திர போராட்டம் (இந்திரா காந்தியின் emergency ) காலங்களில் நடந்த போராட்டங்கள் பற்றி தெரியாது.. இவ்வளவு ஏன்? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உண்மையான பிரச்னைகூட தெரியாது.. வேறு எது தெரியும்?

திராவிட கட்சிகளின் புண்ணியத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் பேச தெரியும், வயதில் பெரியவர்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் திட்ட தெரியும், தேசத்துக்காக போராடிய தலைவர்களுக்கு ஜாதி மற்றும் மத சாயல் பூச தெரியும், தேசத்தை திட்ட தெரியும், பிரிவினை பேச தெரியும்.. இந்த திராவிட கட்சிகள் இது பெரியார் மண் என்று சொல்லிச்சொல்லி இத்தனை ஆண்டுகளில் தேசபக்தி என்பதை இளைஞர்கள் மனதிலிருந்து படிப்படியாக அழித்துவருகிறது.. இது நம் தேசம் என்ற எண்ணம் வந்தால்தான் இந்த நாட்டிற்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும் என்கிற எண்ணம் வரும்.. அது இல்லாவிட்டால், நாடாவது ஒண்ணாவது, எனக்கு காசு வந்தா போதும் என்று இருக்கதான் செய்வோம்.. அதன் வெளிப்பாடுதான் அரசாங்கத்துக்கு வரிவருமானம் அதிகரித்து வருகிறது என்றால், என் பாக்கெட்டுக்கு அது வரவில்லை என்று குறை சொல்ல தோன்றுகிறது..

அது இருக்கட்டும்.. இன்று மோடியை பாஸிஸ்ட் என்று சில காங்கிரஸ் அரசியல்வாதிகள் சொல்வதை கேட்டு நீங்களும் கூவுகிறீர்களே.. உண்மையான பாசிசம் , அடக்குமுறை என்றால் என்னவென்று தெரியுமா? பாஜக என்ற கட்சி வளர்ந்த உருவான சரித்திரமாவது தெரியுமா? இந்திரா காந்தி மீது அந்த சமயத்தில் (1975 ) பல ஊழல் புகார்கள் எழுந்தது..அதன் பின், அவர் 1975 ல் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது, பல தேர்தல் முறைகேடுகள் நடந்தது நிரூபிக்கப்பட்டதென்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.. இதனால் இந்திரா காந்தியின் செல்வாக்கு சரிந்தது மட்டுமின்றி, ஆட்சி களையவும் அதிக வாய்ப்பிருந்தது..

இதை தடுக்க இந்திரா காந்தி கொண்டுவந்ததுதான் emergency … நீங்கள் பேசுகிறீர்களே கருத்து சுதந்திரம், அதெல்லாம் சுத்தமாக கிடையாது..இந்த காலக்கட்டத்தில் நடந்த கொடுமைகள் என்னென்ன என்று தெரியுமா?

1 இந்திரா காந்தி பல சட்ட திருத்தங்களை செய்து தனக்கு தானே சர்வாதிகாரத்தை ஏற்படுத்திக்கொண்டார்.. அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் சட்டம் கூட பெரிய அளவில் மாற்றி எழுதப்பட்டது

2 ஊடகங்கள் எல்லாம் இஷ்டப்படி எழுத முடியாது.. ஊடகங்களில் வரும் செய்தியை தணிக்கை செய்துதான் அரசாங்கம் வெளியிடும்.. (இப்பொழுது கன்னாபின்னா என்று முகப்புத்தகத்தில் எழுதுவது போல எழுதினால், உள்ளே பிடித்து மிதி மிதி என மிதித்து வெளியே வரமுடியாமல் செய்திருப்பார்கள்)

3 எதிர்த்து கேட்க்கும் எவரையும் வாரண்ட் இல்லாமல் remand பண்ணலாம்..

4 எதிர்க்கட்சி தலைவர்கள் பலரை கேள்விகேட்டு காரணத்திற்க்காக உள்ளே தள்ளிவிட்டார்கள் (இப்பொழுது நடக்கும் நாடகம்போல் காலையில் பிடித்து சாயந்திரம் வீட்டிற்கு அனுப்புவதல்ல, மாத கணக்கில்)

5 மக்கள்தொகையை கட்டுப்படுத்துகிறேன் என்று ஒன்றரை ஆண்டில் 83 லட்சம் பேருக்கு கட்டாயப்படுத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, வயது முதிர்ந்தவர், கல்யாணமாகாதவர் என்று பார்க்காமல்

6 பல குடிசை மற்றும் ஏழைகளின் குடியிருப்புகள் கொத்து கொத்தாக தகர்க்கப்பட்டது

7 கைதுசெய்யப்பட்ட பல அரசியல் தலைவர்களை காட்டுத்தனமாக அடித்து துன்புறுத்தினார்கள்

8 குஜராத் மற்றும் தமிழகத்தில் ஆட்சிகள் கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி வந்தது (அப்பொழுது கலைஞருக்கும் இந்திரா காந்திக்கும் சண்டை)

இன்னும் பல கொடுமைகள் நிகழ்ந்தன..

இந்த காலக்கட்டத்தில்தான் இந்திரா காந்தியை பிரதமராக்கி பெரிய பாவம் செய்துவிட்டேன் என்று மனம் நொந்து, நெஞ்சுவலியால் கர்மவீரர் காமராஜர் இறந்தார்.. இந்த எமர்ஜென்சியை எதிர்க்க, அன்றய ஜனசங்கத்துடன் (இன்றய பிஜேபி) அன்று காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டு வைத்துக் கொண்டது..

இந்த எமர்ஜென்சியை எதிர்த்து தைரியமாக போராடியவர்கள் RSS மற்றும் ஜன சங்கமும்தான்.. ஜெயப்ரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் , வாஜ்பாய், அத்வானி , மோடி, அருண் ஜெட்லீ, சுப்ரமணியம் சாமி போன்றவர்களெல்லாம் பல மாதங்கள் சிறையில் இருந்தார்கள், துன்புறுத்தப்பட்டார்கள்.. மக்களிடம் நடக்கும் அடக்குமுறையை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.. இதன் காரணமாக இரண்டு ஆண்டுகள் கழித்து எமர்ஜென்சி நீக்கப்பட்டது.. 1977 ல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.. இதில் இந்திரா காந்தி மண்ணை கவ்வினார்.. ஜனதா கட்சி (ஜனசங்கம், ஸ்தாபன காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் சேர்ந்த கூட்டணி) ஆட்சியை பிடித்தது.. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றுமையின்மையின் காரணத்தினால் இந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.. இந்த ஜனசங்கம்தான் இன்றய பாஜக

ஆகையால் இன்னொரு முறை பாஸிஸ்ட் மோடி என்று அழைப்பதற்கு முன் ஒரு முறை இந்திராகாந்தியை நினைத்துக்கொள்ளுங்கள்.. காங்கிரஸ் இந்த நாட்டிற்கு ஒரு பெரிய சாபம்.. பிஜேபி இல்லையென்றால் இன்று நீங்களெல்லாம் காணாமல் போயிருப்பீர்கள்.. காவிரி மேலாண்மை விஷயத்திலும் , மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று முட்டுக்கட்டை போடுவதும் கர்நாடகம்தான்.. கர்நாடகா தேர்தல் ஒரு புறம் இருந்தாலும், நான்கு மாநிலத்தின் சம்மதம் இல்லாமல் வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தன்னிச்சையாக அதிகாரம் இல்லை..அந்த சம்மதத்தை இப்பொழுது போராடும் ஸ்டாலின் தன் தோழமை கட்சியான காங்கிரஸிடம் பேசி வாங்கி தர வேண்டியதுதானே? காங்கிரஸ் கட்சி தலைவர் வாய்கிழிய பேசும் திருநாவுக்கரசர் கர்நாடக முதல்வரிடம் பேசி சம்மதம் வாங்கி தரவேண்டியதுதானே? அறிவை இழந்து உணர்ச்சிவசப்படும் முட்டாள்கள் சிந்திக்க வேண்டும்..

நான் மேலே சொன்ன தகவல்களை எல்லாம் நம்பவில்லை என்றால் பழைய செய்தித்தாள்கள் நூலகங்களில் கிடைக்கும்.. இல்லையென்றால் இணையத்தில் தேடி படித்துவிட்டு ஊர்ஜித படுத்திக்கொள்ளுங்கள்

Leave a Reply