பாஜகவைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடுகிறார் பிரதமர் நரேந்திரமோடி.

 பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு சமூகதளங்களை அதிகளவில் பயன்படுத்துகிறார். டுவிட்டர், பேஸ்புக்கில் அதிகமானோர் அவரை பின்தொடர் கின்றனர்.

கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில தலைவர்களுடனும், அவர் அடிக்கடி மின்னணு தகவல்முறைகள் மூலம் தொடர்புகொண்டு வருகிறார். பாஜவுக்கு லோக்சபாவில் 274 எம்பிக்கள், ராஜ்ய சபாவில் 68 எம்பிக்கள் மற்றும் நாடு முழுவதும், 1455 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் நாளை காலை 11 மணிக்கு நரேந்திர மோடி ஆப் மூலம் வீடியோ கான்பரஸ் முறையில் அவர் கலந்துரையாட உள்ளார். இதை பாஜக தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் சட்ட சபை தேர்தல் உள்பட பல அரசியல் பிரச்னைகள் உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply