லோக் சபா தேர்தலுக்கான கூட்டணிதொடர்பாக கொங்குநாடு மக்கள் கழகத்துடன் நேற்று பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது . ம.தி.மு.க.,வுடன் வரும் 23-ந்தேதி அதிகாரப் பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைப்பதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ அறிவித்திருந்தார். மேலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐவர் குழுவை வைகோ அமைத்தும் இருந்தார். இந்தகுழு வருகிற 23-ந்தேதி பாரதிய ஜனதா தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்கட்டமாக மதிமுக. மற்றும் கொங்குநாடு மக்கள் கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம். பாமக., தேமுதிக. ஆகிய கட்சிகளும் எங்கள் அணியில் இணையும் என்றார்.

Leave a Reply