மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கட்சிகளிடை யேயான 25 ஆண்டுகால கூட்டணி முறிந்தது. பாஜக தலைவர் அமித் ஷா இன்று மும்பையில் சிவசேனா தலைவர்களுடன் நடத்துவதாக இருந்த பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டது. வரும் அக்டோபர் 15 ம தேதி மகாராஷ்ட்ரா சட்ட சபைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், விரைவில் தொகுதிபங்கீடு பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று அமித்ஷா எதிர்பார்த்தார்,

ஆனால் சிக்கல் தீரும்நிலையில் இல்லை. காரணம் மொத்தம் உள்ள 288 தொகுதியில் சிவசேனா 151 தொகுதி-பா.ஜ.க 130 தொகுதியில் போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்துகொண்டன. மற்ற சிறியகட்சிகளுக்கு 7 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டன.இதனால் அதிருப்தி அடைந்த சிறியகட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறியன.

இந்த நிலையில் சிவசேனா கட்சி, சிறியகட்சிகளுக்கு பாஜக தான் சீட்டுகளை பங்கிட்டுககொள்ள வேண்டும் என்றும், தாங்கள் 150 தொதிக்கு குறையாக போட்டியிடமுடியாது என்பதிலும் திட்டவட்டாக உள்ளது. மேலும் முதல்வர் வேட்பாளர் தங்கள் கட்சியினர் தான் என்பதில் உறுதியாக இருந்தது.

இந்நிலையில் பாஜக உயர்மட்ட குழு இன்று அவரச ஆலோசனை நடத்தியது. பின்னர் சிவசேனா கூட்டணியில் இருந்து பிரிவதாக பாஜக அறிவித்துள்ளது. மேலும் புதியகூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முறிவுகுறித்து பாஜக மூத்த தலைவர் பிரதாப்ரூடி கூறுகையில், மகாராஷ்டிராவில் மாநில தலைவர்கள் சிவசேனா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர், எங்கள் கட்சி சிவசேனாவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவே விரும்பிகிறோம். ஆனால் நேரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

Tags:

Leave a Reply