25 கோடி மக்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படும் மத்திய அரசைக்கண்டித்து எதிர்க் கட்சிகள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதை தொடர்ந்து டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது .

இதில் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் பேசியதாவது:- 2008ல் அணு சக்தி ஒப்பந்தம் செய்ததை எதிர்க் கட்சிகள் தங்களது எதிப்பை கடுமையாக காட்டின . அப்போது ஐக்கிய_முற்போக்கு கூட்டணி அரசு, முறைகேடு செய்து நம்பிக்கை வாக் கெடுப்பில் வெற்றிபெற்றது என அத்வானி குறிப்பிட்டார்.

இதனால் சோனியா காந்தி கோபம்கொண்டார். ஆனால் அத்வானி அவர்கள் கூறியது உண்மை. மல்டிபிராண்ட் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடிமுதலீட்டை பிரதமர் மன்மோகன் சிங் அனுமதித்து இருப்பதன்மூலம் 25 கோடி மக்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படும்.

கடந்த 64 வருடங்களாக நேரு, இந்திரா காந்தி, குஜ்ரால், தேகவுடா, வாஜ்பாய் போன்ற எந்த ஒரு பிரதமரும் எடுக்காத முடிவை மன்மோகன் சிங் எடுத்துள்ளார். எனவே அவரை பிரதமர் பதவியிலிருந்து காங்கிரஸ் தலைமை நீக்கவேண்டும்.

மேலும் இதை போன்றே மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோரையும் நீக்கவேண்டும். புதிய பொருளாதார சீர்திருத்ததினால் உள் நாட்டு சந்தை அழியும் . புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனும வாதங்களை ஏற்கமுடியாது என்றார்

Tags:

Leave a Reply