பாஜக. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த 21–ந் தேதி உ.பி., மாநிலம் ஆக்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் அமர்வதற்காக விசேஷ நாற்காலி ஒன்றை தயாரித்து வைத்திருந்தனர் .

பொதுக்கூட்டம் முடிந்து நரேந்திரமோடி புறப்பட்டுச் சென்றபிறகு, அவர் அமர்ந்த நாற்காலியை விலைகொடுத்து வாங்க பா.ஜ.க. எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளிடையே கடும்போட்டி ஏற்பட்டது.

ஒரு நிர்வாகி ரூ.10 ஆயிரம் தருவதாககூற, மற்றொரு பாஜக. நிர்வாகி ரூ.5௦௦௦௦ ஆயிரம் தருகிறேன் என்றிருக்கிறார் . இப்படி பலரும் போட்டிபோட்ட நிலையில் பாஜக எம்.எல்.ஏ. யோகேந்திரா என்பவர் ஒரு படி மேலே ரூ.2.5 லட்சம் தருவதாக கூறியிருக்கிறார் . ஆனால் அந்த நாற்காலியை யாருக்கும் கொடுக்கமாட்டேன். நானே வைத்துக் கொள்ளப்போகிறேன் என்று அந்த நாற்காலியை வடிவமைத்த காண்டிராக்டர் பிரமோத் கூறியுள்ளார்.

Leave a Reply