நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரியாக பதவியேற்ற சுஷ்மாசுவராஜ் முதன் முதலாக வங்காள தேசத்திற்கு வரும் 25ம் தேதி அரசு முறைப்பயணமாக செல்கிறார். அங்கு அவர் மூன்று நாள் தங்கியிருந்து அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட பலரை சந்திக்க உள்ளார்.

புதியமத்திய அரசு பொறுப்பேற்ற பின் வங்கதேச தலைநகர் டாக்கா செல்லும் மூத்த மந்திரி என்ற பெருமை சுஷ்மாவுக்கு கிடைத்துள்ளது. அங்கு அவர் அந்நாட்டு அதிபர் அப்துல்ஹமீது, பிரதம மந்திரி ஷேக்ஹசீனா மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரான மகமூது அலி ஆகியோரை சந்திக்க உள்ளார். அந்நாட்டின் எதிர்க் கட்சி தலைவராக விளங்கும் கலிதா ஜியாவையும் சுஷ்மா சந்திக்க இருப்பதாக தெரிகிறது .

Leave a Reply