இணையதள வசதியை மேம்படுத்த நாடுமுழுவதும் 2500 சிறு, பெரிய நகரங்களில் இலவச வைபை வசதியை கொண்டு வர மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது.பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, இணைய தள சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

'டிஜிட்டல் இந்தியா' என்ற குறிக்கோளுடன் அனைத்து துறை களிலும் இணைய தள வசதியை மேம்படுத்தி வருகிறது. அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை கணினி மயமாக்கப் பட்டு வருகிறது.இணையதள பிரசாரத்தின் மூலம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர்ந்தது பாஜ. இணையதள சேவையை பெரிதுவிரும்பும் பிரதமர் மோடி, தனது கருத்துக்களை உடனுக்குடன் டிவிட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவித்துவருகிறார்.

இந் நிலையில், இணையதள சேவையை மேம்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் 2500 சிறு, பெரிய நகரங்களில் இலவச வைபை வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூலம் 3 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இணைய தள சேவையை விரைவு படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வை-பை சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply