மத்திய அரசு வெறும் 254 வாக்குக்கே திண்டாடியுள்ளது மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர் பார்த்து இருக்கவேண்டிய நிலையிலேயே மத்திய அரசு உள்ளது . அதுஒரு நொண்டி வாத்து என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார் .

எப்.டி.ஐ மீதான வாதம் மாநிலங்களவையில் நடந்தபோது, எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி பேசியதாவது, மக்களவையில் மத்திய அரசு பெற்றது உண்மையான வெற்றியல்ல. மத்திய அரசு வெறும் 254 வாக்குகளைத்திரட்டவே அதிகம் சிரமப்பட்டிருக்கிறது . இது எப்படி 272 வாக்குகளைத் தொடமுடியும். இந்த மசோதாமூலமாக மத்திய அரசு ஒரு நொண்டிவாத்து என்பதை நிரூபித்துள்ளது.

மசோதாவிலிருந்து மத்திய அரசு தப்பிக்க அதிகமாக போராடியது. அதற்காக அதிகவிலையையும் கொடுத்துள்ளது. இதே விலையை நாள் தோறும் மத்திய அரசு கொடுத்தாகவேண்டியது வரும். இந்நிலை நாட்டை எந்தவகையில் முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லும் என தெரியவில்லை என்று பேசினார்.

Leave a Reply