மராட்டிய சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க 257 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

மராட்டிய பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:–

மராட்டிய சட்ட சபை தேர்தலில் சிவசேனா– பா.ஜ.க 'மகாயுதி' கூட்டணி உடைந்ததைதொடர்ந்து, அந்த கட்சியில் இருந்த சிறியகட்சிகள் பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளன. நாங்கள் (பா.ஜனதா) 257 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

எங்களது கூட்டணி கட்சிகளுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கீடுசெய்து உள்ளோம். அதில் ராஜூ ஷெட்டியின் சுவா பிமானி கட்சிக்கு 14 தொகுதிகள், மகாதியோ ஜங்கரின் ராஷ்டிரீய சமாஜ் கட்சிக்கு 5 தொகுதிகள், ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சிக்கு 8 தொகுதிகள், விநாயக்மேதேயின் சிவ் சங்க்ரம் கட்சிக்கு 4 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு உள்ளன.

காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மோசமான கூட்டணி அரசுபற்றி மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்போம். மீண்டும் அந்தகட்சிகள் ஆட்சிக்கு வர விடாமல் தடுப்போம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Leave a Reply