மக்களவைத்தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க தேர்தல்கமிட்டி கூட்டம் வரும் 27ம்தேதி கூடுகிறது. . இக்கூட்டத்தில் பாஜக கட்சியின் முதல்வேட்பாளர் பட்டியல் குறித்து முடிவுசெய்யப்பட்டு, கட்சியின் மூத்த தலைவர்களின் பெயர்கள் அதில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க தேர்தல்குழு கூட்டம் வரும் 27ம்தேதி தில்லியில் கூடி கட்சியின்வேட்பாளர் பட்டியல் குறித்தும், மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் உள்ளிட்ட முக்கியமுடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பா.ஜ.க வேட்பாளர்களை தேர்வுசெய்யும் குழுவில், கட்சியின் மூத்த தலைவர்கள் எல்கே.அத்வானி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, அருண்ஜெட்லி, சுஸ்மாஸ்வராஜ், முரளிமனோகர் ஜோஷி மற்றும் சில தலைவர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அருண்ஜெட்லி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply