என்.டி.டிவி நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் நாடுமுழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாகவும்,பாஜகவுக்கு பெரும்வெற்றி கிடைக்கும் என்றும், காங்கிரஸுக்கு பேரடி விழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 12 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 319 இடங்கள் யாருக்கு கிடைக்கும் என்பதை என்.டி.டிவி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதில் 166 இடங்களை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு வெறும்  52 இடங்களே கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

மேற்குவங்கத்தில், 42 தொகுதிகளில் 32 இடங்களை திரிணமுல் காங்கிரசும்  வெறும் 9 இடங்களில் மட்டுமே இடதுசாரிகளும்  வெற்றி பெறுவர் என கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக., 19 தொகுதிகளையும், காங்கிரஸ் 5 இடங்களையும் கைப்பற்றும் என்றும். சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளை பாஜக., 9, காங்கிரஸ் 2 என பிரித்துக்கொள்ளும் என்றும்.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில்  பாஜக 23னை யும் . காங்கிரஸ் 3 யும்  கைப்பற்றும் என்றும்.  ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்த வரையில், மொத்தமுள்ள தொகுதிகள் 14. இதில் 6 தொகுதியை பாஜக.,வும், 4 தொகுதியை காங்கிரசும் கைப்பற்றும் என்றும்.

பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சி  5 இடங்களையும்  பா.ஜ., 23 இடங்களையும் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் 11 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply