திரு.நரேந்திரமோடி அவர்களால் இந்தியா272+ எனும் புதிய மொபைல் செயலி கடந்த 1-1-2014 அன்று வெளியிடப்பட்டது. இது கூகிள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. லிங்க் கீழே..

இது இந்தியா மற்றும் வெளிநாடு வாழ் இந்தியாவில் உள்ள பாஜக தன்னார்வர்களிடையே ஒரு இணைப்பாக, பாஜகவின் ‘மிஷன்272+’ குறிக்கோளுக்கு ஒரு பாதையாகவும் திகழும். தன்னார்வர்களிடையே கருத்து, புது உத்தி, ஆகியவைகளை ‘க்ரூப்’ மற்றும் ‘பொது போரம்’களில் பரிமாறிக்கொள்ளவும், திரு.மோடியின் எதிர்வரும் பிரசாரங்களை தெரிந்துகொள்ளவும் உதவும்.

பெண்கள், மருத்துவர், NRI, IT, கலை மற்றும் பல துறையினர் பங்கு பெரும் வகையில் க்ரூப்களில் சேர்ந்து கருத்து பரிமாறிக்கொள்ளலாம்.

பாராளுமன்ற தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டுள்ள க்ரூப்பில் தாங்கள் சேர்ந்து அருகிலுள்ள வாக்காளர்களுடன் தொடர்பில் இருக்கலாம்!

இந்த மொபைல் செயலியிலிருந்தே பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற சமூக தளங்களுக்கும் பரிமாறிக்கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.volunteer.app

Leave a Reply