பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பதினாறாம் நூற்றாண்டின் சத்ரபதி சிவாஜியா என்றால் நிச்சயமாக இருக்க முடியாது, யாரும் யாருமாக முற்றிலும் ஆகிவிட முடியாது. ஆனால் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில், சிவாஜியை போன்ற வலிமை மிகு சீர்திருத்தவாதி,  தேசப்பற்றாளர், ஆட்சியாளர் யார்? என்ற கேள்வி எழுமே என்றால்,  நரேந்திர மோடியை நோக்கியே  பலரின் கரங்கள் நீளும். ஆம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே 21ம் நூற்றாண்டின் வலிமை மிகு வீர சிவாஜியாவார்

இந்நிலையில் தான் நரேந்திர மோடியை சத்திரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு வெளிவந்துள்ள ஆஜ் கி சிவாஜி நூலும், அதை எழுதிய ஜெய் பகவான் கோயலும் சர்ச்சைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்.. எப்படி சிவாஜியுடன் ஒப்பிடலாம் என்று  போராட்டமாக, காவல் துறையில் புகாராக  வடிவம் எடுத்துள்ளது. இவைகளெல்லாம் மக்களால் முன்னெடுக்க படவில்லை. .தங்களை மராத்திய மண்ணின் மைந்தராக, வீர சிவாஜியின் கொள்கை வழி தோன்றல்களாக காட்டிக்கொண்டு, பதவிக்காக தடம் மாறிப்போன சிவசேனாவும், நிகழ்கால முகலாய பேரரசை நடத்தும் பாகிஸ்தானின் நண்பர்களான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகலாலுமே முன்னெடுக்க படுகிறது.

சத்திரபதி சிவாஜியுடன் யாரையும் ஒப்பிட முடியுமா?, காங்கிரசின் வாரிசு தலைவர் ராகுல் காந்தியை ஒப்பிட முடியுமா?. மன்மோகன் சிங்கை  ஒப்பிட முடியுமா?, என்றால், ஒப்பிடலாம்!, இந்தியாவில் பல வலிமை மிகு சாம்ப்ராஞ்சியங்களின் வீழ்ச்சிக்கு வித்திட்ட இளவரசர்களுடன் ராகுல் காந்தியை ஒப்பிடலாம், ஆட்சி அதிகாரத்துக்காக, சுக போகத்துக்காக முகலாயர்களிடம் கப்பம் கட்டிவிட்டு பொம்மை ஆட்சிபுரிந்த சமஸ்தானங்களின் பேரரசர்களுடன் மன்மோகன் சிங்கை ஒப்பிடலாம். .ஆனால் சத்ரபதி சிவாஜியுடன் உவமைக்கு கூட ஒப்பிடும் தூரத்தில் இவர்கள் இல்லை.

ஏனென்றால் அவர்  முகலாயர்களின் பிடியில் சிதறுண்டு கிடந்த பல மராத்திய சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தவர், தாய்மண்ணை நேசித்தவர், சிறு வயது முதலே ராமாயணம்,மகாபாரதம் போன்ற புராணங்களின் மீது கொண்ட நாட்டத்தால் அதன் வழிஆட்சி புரிந்தவர். முகலாயர்களின் இஸ்லாமிய ராஜ்யம் என்ற கனவை பொய்ப்பிக்கவர். வலிமையான இராணுவத்தை படைத்தவர். எதிரிகள் யோசிக்கும் முன்னே அவர்கள் கோட்டைக்குள் புகுந்து துவம்சம் செய்தவர்.

நரேந்திர மோடியோ காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கி முதல் ஒன்றுபட்ட இந்தியாவை படைத்தவர். ஸ்ரீ ராமனின் ஆலயத்தையே மீட்டவர், தற்கால முகலாய பாணி ஆட்சி நடக்கும் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனம் அவர். பாக்கின் தீவிரவாத முகாமை அந்நாட்டுக்குள்ளேயே புகுந்து துவம்சம் செய்தவர்.  இந்திய ராணுவத்தை வலிமை மிகுந்ததாக மாற்றியவர், சிறந்த தேசப்பற்றாளர் என்று பல ஒற்றுமைகளை கூறிக்கொண்டே செல்லலாம். எனவேதான் கூறுகிறோம் நரேந்திர மோடியை 21ஆம் நூற்றாண்டின் வலிமை மிகு சிவாஜியாவார் என்று.

நன்றி தமிழ் தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.