இந்திய பாராளுமன்ற ., வரலாற்றில் சமீபகாலத்தில் இல்லாத அளவிற்கு பாஜக., கூட்டணி 275 தொகுதிகளை பிடித்து தனிமெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய என்டிடிவி எடுத்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது

மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தம் 275 தொகுதிகள் கிடைக்கும் என்றும். இதில் பாஜக மட்டும் தனித்து 226 இடங்களைக் கைப்பற்றும் என்றும். காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணிக்கு மொத்தம் 111 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன .

80 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பாஜக 51 தொகுதிகளையும் , சமாஜ்வாடி 14 தொகுதிகளையும் , பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளையும் , காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும் கிடைக்கும் என்றும்.

40 தொகுதிகளை கொண்ட பீகாரில் பா.ஜ.க-24; ராஷ்டிரிய ஜனதாதளம் -12; ஐக்கிய ஜனதா தளத்துக்கு 4 இடங்கள் கிடைக்குமாம். கடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 20 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகள் உள்ளன. இங்கு 26ல் பாஜக ; காங்கிரஸ் 3 இடங்களில் வெல்லும்.26 தொகுதிகளைக்கொண்ட குஜராத்தில் பா.ஜ.க 22 தொகுதிகளையும் காங்கிரஸ் 4-ல் மட்டும்வெல்லும்.

25 தொகுதிகளைக்கொண்ட ராஜஸ்தானில் 21 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றுகிறது . காங்கிரஸ் கட்சிக்கு 3 தான் கிடைக்குமாம். 13 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பாஜக அணிக்கு 7 தொகுதிகளும் காங்கிரஸூக்கு 6 இடங்களும் கிடைக்குமாம்.

10 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் 6 இடங்களை பா.ஜ.க கைப்பற்ற, காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் கிடைக்கும்.

7 தொகுதிகளை கொண்ட டெல்லியில் பா.ஜ.க 6, ஆம் ஆத்மி 1 இடத்தில் வெல்லும். காங்கிரஸுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது.

Tags:

Leave a Reply