கொரோனா வைரசை கட்டுப் படுத்துவதற்கான வழிகளை கண்டறியவேண்டும் என சார்க் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:நமதுகிரகம் கொரோனா வைரசை எதிர்த்துவருகிறது. பலமட்டங்களில், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசுகளும், மக்களும் தங்களால் முடிந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் தெற்கு ஆசியாவில், நமதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதிசெய்யும் எந்தவொரு வாய்ப்பையும் தவற விடக் கூடாது.

சார்க் நாட்டு தலைவர்கள், கொரோனா வைரசை கட்டுப் படுத்துவதற்கான வலிமையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என நான் கேட்டுகொள்கிறேன். நமது குடிமக்களை ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகளை நாம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்துவோம். அனை வரும் ஒருங்கிணைந்து, உலகத்திற்கு நாம் ஒரு முன் மாதிரியாக இருப்பதுடன், நமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது பங்களிப்பை அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.