கொரோனா தொடர்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழகரசின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவேகம் எடுத்துள்ளது. 275 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.இதில் மொத்தம் 229 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள். 2 பேர் மிக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒரே நாளில் நேற்று 63 பேர் இதனால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரியபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக இன்றுமட்டும் காலையிலிருந்து 17 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 23 பேர் இந்தவைரசில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்

இந்நிலையில் கொரோனா தொடார்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்தார். மொத்தம் 22 மாநில முதல்வர்கள் இதில் கலந்து கொண்டனர். கடந்த வாரம் மக்கள் முன்னிலையில் பேசியமோடி அப்போதே மணல் முதல்வர்களை இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து இருந்தார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்றது.

மொத்தம் இரண்டரை மணிநேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 9 மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகமுதலவர், கேரள முதல்வர், மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தர பிரதேச ஆகிய மாநில முதல்வர்கள் இதில் நீண்ட நேரம் பேசினார்கள். தங்கள் மாநிலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இதில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை குறித்து பேசினார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எப்படி சரிசெய்யப்பட்டார் என்று விளக்கம் அளித்தார். இவரும் பல்வேறு முக்கிய விஷயங்களை இதில் எடுத்துரைத்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழகரசின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார். தமிழக முதல்வர் பழனிச்சாமியை பாராட்டிய மோடி, நீங்கள் சரியாக செயல்படுகிறீர்கள். தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. உங்கள்பணிகளை தொடருங்கள் என்று கூறினார். அதன்பின் மகாராஷ்டிரா மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் தீவிரமாக முயலவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசின், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி தமிழக அரசு சிறப்பபாவே செயல்பட்டு வருகிறது. இதில் தமிழக எல்லைகளை மூடி பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்களின் நடமாட்டத்தை குறைத்தது காலத்துக்கு ஏற்ற மிகவும் துணிச்சலான நடவடிக்கை என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை வெல்டன் எடப்பாடி.

Comments are closed.