நரேந்திர மோடி பிரதமரானால் நாடு வளர்ச்சிகாணும் , கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20-ல் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடகவில் சனிக்கிழமை மைசூர்-குடகு தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது:

நாட்டில் நரேந்திர மோடி அலை வீசிவருகிறது. இதனால் தேசியளவில் அதிக இடங்களில் பாஜக வெற்றிபெரும். அதிக தொகுதிகளை பிடிப்பதன் மூலம் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பிரதமர் ஆக உள்ளார். அவர் பிரதமர் ஆனால் 6 மாதங்களில் நாடு பெரும்வளர்ச்சி அடையும். இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தனிமதிப்பு ஏற்படும். அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்துச் செல்லும் திறமை மோதியிடம் உள்ளது. இதனால் எங்கும் மதகலவரம், ஜாதிசண்டை ஏற்படாமல் நாடு செழிப்பாக இருக்கும். கர்நாடகத்தில் பாஜகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஷிமோகாவில் மஜத வேட்பாளர் கீதா சிவராஜ் குமார் நடிகர்களை அழைத்துவந்து பிரசாரம் செய்கிறார். அப்பகுதி மக்களும் பிரசாரத்தில் ஈடுபடும் நடிகர்களை ஆர்வமுடன் பார்க்கின்றனர். ஆனால் தங்களது வாக்குகளை பா.ஜ.க.,விற்கு அளிக்க ஆர்வமுடன் உள்ளனர். தேர்தலில் ஷிமோகாதொகுதியில் ஒருலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20-ல் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார் அவர்.

Leave a Reply