இன்று கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை   2 கோடியை  நெருங்க கொண்டிருக்கிறது. இதில் இந்தியா ஒன்றும்  விதிவிலக்கல்ல. ஆனால் கொரோன பரவளில் உயிர் பலி கொள்வதில்  பொய்யாகி வருகிறது. ஜூலை மாத மத்தியில் இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை கோடிகளில் புழங்கும் என்கிற உலக ஊடகங்களின் ஆருடங்கள் எல்லாம் பொய்க்கப் பட்டுள்ளது.

இது சாதாரணமாக நடந்துவிடவும் வில்லை மத்தியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் சமோயோகித்த நடவடிக்கை களினாலேயே சாத்தியமாகியது. மார்ச் மாதம் 22ம் தேதி ஒரு நாள் ஊரடங்கு ,அதை தொடர்ந்து 24ம் தேதி முதல் சில வாரங்கள் நீடித்த  தொடர் ஊரடங்கு. டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டு நாடு முழுவதும் கொரோன தொற்றுடன் பயணித்தவர்களை   ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தனிமை படுத்தி, தரமான சிகிச்சை தந்தது. என்று வரிசையாக  கூறலாம்.

இங்கு மத வேறுபாடுகளை கடந்து கட்டுப்பாடுகளும், நிவாரணங்களும் ஒருங்கே செய்யப்படுகின்றன . அது இந்து, இஸ்லாம் கிஸ்தவம் என்று  வேறுபாடுகள் எல்லாம்  பார்க்கப் படுவது இல்லை. அது அணைத்து மத வழிபட்டு தளங்களையும் மூடியதாக இருக்கட்டும். நிவாரண  நிதி, ரேஷன் பொருட்கள், தரமான மருத்துவம் என்று அனைத்து உதவிகளையும்  அணைத்து மதத்தினருக்கும் கிடைக்க செய்ததாக இருக்கட்டும். இதில் எந்த வேறுபாடுகளும், விளம்பரங்களும் பார்க்கப்படவில்லை.

ஆனால் சமீபத்தில் தஞ்சையில் கொரோனாவால் உயிரிழந்த பாஜக நிர்வாகியின் உறவினர் உடலை, தமுமுக.,வினர்  (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்)   தங்கள் அவசர ஊர்தி மூலம் கொண்டு சென்றதை, அடக்கம் செய்ததையெல்லாம் , தொலைக் காட்சி,  பத்திரிக்கைகளில்  செய்திகளாக்கியதை, நாங்கள் இந்து என்றெல்லாம் வேறுபாடு பார்ப்பதில்லை  என்று கூறி விளம்பர நோக்குடன் நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ள இயலாது.

பணம் வாங்கி கொண்டு செய்தாலும் இந்த சேவை பாராட்டடுக் கூறியதே.  அதே நேரம் ஏண்டா இவர்களிடம் இதை  கோரினோம்  என்று வருந்தும் அளவிற்கு அந்த குடும்பங்களை சங்கடத்துக்கு உள்ளாக்கியது  சேவைதானோ?.பல்வேறு இக்கட்டான கால கட்டங்களில் எத்தனையோ லட்சமோ லட்சம் பேருக்கு உதவிய  போதிலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாத ராஷ்டிரிய சுயம் சேவக் , சேவாபாரதியின் சேவைகளை என்னவென்று சொல்வது?.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 2 லட்சத்துக்கும்  அதிகமான சுயம் சேவகர்கள் கொரோன  பாதித்த பகுதிகளில் சேவா பணியில் ஈடுபட்டு வருகின்றனரே. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினருக்கு அரிசி,மளிகை சாமான்களை வழங்கியது. நோய் எதிர்ப்பு ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கியது, வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கியது என்று கூறிக்கொண்டேசெல்லலாமே?.

குறிப்பாக மகாராஷ்டிரத்தில் கடும் பாதிப்புக்குள்ளான புனே, தாராவில் போன்ற பகுதிகளில் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்ததில் சுயம் சேவகர்களின் பங்கு அலாதியானது. புனேவில் 1016 சுயம் சேவகர்கள் 365 மருத்துவர்கள் கொண்ட குழு 102450 பேர்களை பரிசோதித்தது. மும்பையின் மிகவும் நெருக்கடி மிகுந்த தாராவில் பகுதியில் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையானதை செய்து, நோயாளிகளை கண்டறிந்து தீவிர பரவலை குறைத்தது. நோய் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது மும்பையில் திடீர் உடல் நலக் குறைபாடுக்கு உள்ளாவோரை இலவச வாகன சேவைகள்  மூலம் மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்றது என்று உதாரனங்கள் பல உண்டு. அதாவது கொரோனவை அதன் இடத்திலேயே எதிர்கொண்டு. தன்னையும் பாதுகாத்து, கொரோனா பாதித்தவரையும் காப்பாற்ற முயல்வது மாபெரும் சேவையல்லவா?.

எந்த பிரதிபலனும் பாரத இந்த தன்னலமற்ற பணிகளுக்கு பெயர் சேவையா?. தம்பட்டம் நோக்குடனே செயல்படுவது சேவையா? .

நன்றி தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.