2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்ப்படவில்லை என்று கூறுவது தவறு. இழப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை என சிபிஐ தலைமை அதிகாரி அமர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார் .

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணை நாடாளுமன்ற பொது

கணக்கு குழு முன்பாக செவ்வாய்கிழமை ஆஜராகி விளக்கம் தரும்போது அவர் இவ்வாறு தெரிவித்ததாக பொது கணக்குக்-குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முரளி மனோகர் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது முதலில் வருபவருக்கு முன்னுரிமை எனும் கொள்கையின் அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு-செய்ததில் அரசுக்கு நஷ்டம் ஏற்படவில்லை என கூறுவது தவறு என சிபிஐ தலைமை_ அதிகாரி ஏ.பி. சிங் தெரிவித்தார். ஆனால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கூற இயலாது . ஏனென்றால் 2-ஜி ஒதுக்கீட்டில் இருக்கும் குற்ற பின்னணி குறித்து மட்டுமே நாங்கள் விசாரித்து வருகிறோம் என பிரதாப் சிங் கூறினார்-.

Leave a Reply