கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத்தேர்தலில் ஆட்சியைபிடிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகளில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா தீவிரமாக உள்ளார். அமித்ஷா இன்று முதல் 3 நாட்கள் பெங்களுருவில் முகாமிட்டுகட்சியின் பல்வேறு மட்ட தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

அடுத்த 6 மாதத்தில் சட்டசபை தேர்தலில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்குறித்து முடிவு செய்யப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகமாநில முதல் அமைச்சர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும் வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கர்நாடக மாநில பாஜக நிர்வாகிகளும், , மேலிடமும் கருத்துகணிப்பு நடத்தி ஏறக்குறைய வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்து வைத்து உள்ளன.

ஒருதொகுதிக்கு 2 முதல் 3 வேட்பாளர்கள் பெயர்வரை பரீசீலிக்கப்பட்டு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு என்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் அமித் ஷா கருத்து கேட்கிறார்.

தேர்தல் மற்றும் பிரசாரவியூகம் குறித்தும், பிரதமர் மோடியின் தேர்தல்பிரசார திட்டத்தை பயன்படுத்தி வெற்றியை பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இன்று பிற்பகலில் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக கர்நாடக மாநில தலைமை அலுவலகத்துக்கு செல்லும் அமித்ஷா கட்சியின் மாநில நிர்வாகிகள்,மண்டல அமைப்பு செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள்,பல்வேறு அணித்தலைவர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிதர்வாகிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பேசுகிறார்.

இதைத்தொடர்ந்த பாரதிய ஜனதா எம்.பி.க்கள்-எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.எல்சிக்கள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்னர் இன்று மாலையில் ஐந்து நடசத்திர ஓட்டலில் நடக்கும்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.அங்கு கட்சி முன்னோடிகள், சாதனையாளர்கள், கட்சிசாராத முக்கிய பிரமுகர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்துகிறார்.நாளை (13-ந்தேதி) கட்சி அலுவலகத்தில் நடக்கும் அரசியல் விவகாரங்கள் குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.அதன் பிறகு மண்டியா மாவட்டத்துக்கு சென்று நிர்மலானந்த சாமிகளை சந்தித்து ஆசிபெறுகிறார். பின்னர் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கரை சந்தித்து ஆசி பெறுகிறார்.கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.

14-ந்தேதி மீண்டும் கட்சி அலுவலகத்துக்கு செல்லும் அமித் ஷா கட்சியைவளர்க்க பாடுபட்ட தன்னவர்வலர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துபிரிவு நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் மீண்டும் டெல்லி புறப்பட்டுசெல்கிறார். 3 நாட்கள் பெங்களுருவில் அமித் ஷா முகாமிடுவதால் கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள் மகிழச்சி அடைந்து உள்ளனர்.

Leave a Reply