தொழில்நுட்ப காரணத்தால் கால தாமதமான மோடியின் 3டி பிரசாரம் இன்றுமுதல் (ஏப்ரல் 11) தொடங்குகிறது , தேர்தல்நெருங்குவதால் நேரமின்மை காரணமாக பிரசாரத்தில் 3டி தொழில் நுட்பத்தை கையாள பாஜக. முடிவுசெய்தது. அதன்படி, 7ஆம் தேதி முதல் பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3டி தொழில்நுட்பத்தில் தனது பிரசாரத்தை மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், சிலதொழில்நுட்ப கோளாறுகளால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், 3டி ஹாலோகிராபிக் தொழில்நுட்பம் மூலம் நரேந்திரமோடி இன்று பிரசாரம் செய்கிறார். மோடியின் பிரசாரத்தில் புதியபரிமாணத்தை உருவாக்கும் வகையில் புல்பூர் மக்களவை தொகுதியின் ஐஸ் வர்ஷரன் கல்லூரிக்கு அருகில் உள்ள பூங்காவில் இன்று 3டி பிரசாரம் நடக்கிறது.

3டி ஹாலோ கிராபிக் மூலம் ஒரு’செட்’ அமைத்து அதில் மோடி முன்கூட்டியே பொதுக்கூட்டத்தில் பேசுவது போன்று பேசி பதிவுசெய்யப்படும். இதனை ஒலி-ஒளியுடன் 3டி ப்ரொஜெக்டர் மூலம் 45 டிகிரி அளவில் விளக்குகள் அணைக்கப்பட்டு மேடைமீது ஒளிபரப்பினால் ஒரேநேரத்தில் அதிகமான இடங்களில் மோடி நேரடியாக மக்கள் முன்தோன்றி பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அப்போது முப்பரிமாண முறையில் மோடி மேடைமீது தோன்றுவார். இதனை 3டி கண்ணாடி இல்லாமலே பார்க்கமுடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த 3டி தொழில்நுட்பம் மூலம் இன்று மாலை 6 மணி அளவில் ஒரேநேரத்தில் நாடுமுழுவதும் 106 இடங்களில் மோடி பிரசாரத்தில் பேசுகிறார்.

Tags:

Leave a Reply