டெல்லியில் நேற்று இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் சோதனை நடத்தியபோது வெடி பொருள்களும் சிக்கியுள்ளது . இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் 3 பேரையும் தீவிரவாத தடுப்புபடை பிரிவிடம்

ஒப்படைத்தனர். அவர்கள் மூன்று பேரையும் ரகசிய இடத்தில்வைத்து விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து டெல்லி துறை கூறும்போது, இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச்சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை கைதுசெய்துள்ளோம். இவர்கள் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவரான யாகின்பத்கலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றனர். கைதான மூன்று பேருக்கும் புனே குண்டு வெடிப்பில் தொடர்பிருக்கலாம் என கருதப்படுகிறது. இது பற்றி அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது .

Tags:

Leave a Reply