3டி  நவீன தொழில் நுட்பமுறையில் தேர்தல் பிரசாரம் வரவிருக்கும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு 3டி நவீன தொழில் நுட்பமுறையில் தேர்தல் பிரசாரம்செய்ய முதல்வர் நரேந்திரமோடி திட்டமிட்டிருக்கிறார் .

இதுகுறித்து பாரதிய ஜனதா தேசிய துணைத் தலைவர் புருஷோத்தம்

ரூபிலா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. நாம் வீடியோ கான்பிரன்சிங் தொழில் நுட்பங்களை பற்றி அறிந்துள்ளோம். இந்தவகையில் 3டி தொழில்நுட்பம் மிக வித்தியாசமானது. இதற்காக விசேஷமேடையில் திரை அமைக்கப்படும். முதல்வர் நரேந்திரமோடியின் உருவம் 3டி திரையில் தோன்றும் போது, அவர் மக்களிடையே நேரில் வந்து பேசுவதைப்போன்ற பிரமிப்பை இந்த தொழில்நுட்பம் வழங்கும். தேர்தல் பிரச்சாரத்தில் இந்ததொழில் நுட்பத்தை முதல் முறையாக நாங்கள் பயன் படுத்துகிறோம் என்று அவர் கூறினார்.

நாளை நடைபெரும் தேர்தல்பிரச்சார கூட்டத்தில் பேசும் மோடியின் படப் பதிவு, சூரத், அகமதாபாத், ராஜ்கோட், வதோதரா உள்ளிட்ட நகரங்களில் ஒரேநேரத்தில் 3டி தொழில் நுட்பத்தில் ஒளிபரப்ப படும் என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply