கின்னஸ் புக்கில் இடம் பிடித்த மோடியின்  3-டி  பிரச்சாரம்  சாதனை மேல் சாதனைகளை நடத்தி கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தற்போது தேர்தல் பிரசாரத்தில் 3-டி தொழில்நுட்பத்தை பயன் படுத்தியதன் மூலமாக கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’-லும் இடம் பிடித்துள்ளார் .

சென்ற வருடம் நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் 3-டி வீடியோ கான்பிரன் சிங் ஒளிபரப்பின் மூலம் மோடியின் 55நிமிட தேர்தல்பிரச்சார மேடைப்பேச்சு, ஒரேநேரத்தில் 53 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது.

உலகின் சாதனைதிரட்டு புத்தகமான ‘கின்னஸ்புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’-ல் 2012 – குஜராத்தேர்தல் பிரச்சார சாதனையும் இடம்பெற்றுள்ளதாக, தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply