காங்கிரசின் ஊழல்களில் இருந்து மக்களின்கவனத்தை திசை திருப்புவதே 3வது அணியின் நோக்கம் என பா.ஜ.க மூத்ததலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையாநாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதவாதத்துக்கு எதிரான 3வது அணியின் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்த கட்சிகளும், அதில் கலந்துகொண்ட கட்சிகளும் காங்கிரசின் துணை அணிபோன்றவை.

பா.ஜ.க.,வின் பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திரமோடியின் சவாலை காங்கிரசால் எதிர்கொள்ள முடியவில்லை. இந்த சூழ்நிலையில், காங்கிரசை காப்பாற்றுவதற்காக, இந்தகாங்கிரசின் துணை அணி, உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின்கவனத்தை திசை திருப்புவதற்காக களம் இறங்கிவிட்டது என்று தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியின் ஓட்டுவங்கி அரசியல்தான், அடிப்படைவாத சக்திகள் வளர்வதற்கு காரணம். இந்தசக்திகள், நாட்டின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக திகழ்கின்றன என்று வெங்கையாநாயுடு தெரிவித்தார்.

Leave a Reply