மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக. அமோக வெற்றிபெற்று 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும், இதை மக்கள் பாஜக. மீது வைத்துள்ள அன்பின் அடிப்படையில் சொல்கிறேன் என சிவராஜ்சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ம.பி.யில் வரும் 27ம்தேதி சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கானபிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகானும் சூறாவளி தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரச்சாரத்திற்கு செல்லும்வழியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்: கடந்த பத்து ஆண்டுகளில் ம.பி.யில் பாஜக. ஆட்சியில் மக்கள் திருப்தியாக உள்ளனர். சட்ட மன்றத் தேர்தலில் பாஜக. அமோகவெற்றி பெறுவது உறுதி. இதனை தேர்தல் கருத்துக்கணிப்பு அடிப்படையில் நான் சொல்லவில்லை, மக்கள் பாஜக. மீது வைத்துள்ள அன்பின் அடிப்படையில் சொல்கிறேன், என்றார்.

Leave a Reply