பாஜக. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

பாஜக பிரதமர் வேட்பாளர் பிப்ரவரி 8-ந் தேதி சென்னை வண்டலூர் விஜிபி. மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் கூட்டணிகட்சி தலைவர்களும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாஜக.,வை மதவாதகட்சி என்றும், அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டாம் என்றும் கூறி வருகிறார். அவருக்கு எனது கடும்கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 2001ம் ஆண்டு எங்களது தயவில்தான் அவர் எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை அவர் நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும். முதலில் அவர் தங்களது கட்சியை வளர்ப்பதற்கான செயல்பாட்டில் ஈடுபடவேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து பேசுவதற்காக 3 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பாஜக. முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன், துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநில அமைப்புசெயலாளர் சரவண பெருமாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்றார்.

Leave a Reply