பாஜக கூட்டணியில் 3வது கட்சியாக புதிய நீதிக்கட்சி நுழைந்துள்ளது. ஏற்கனவே ம.தி.மு.க, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளன. இந்நிலையில் புதியநீதிக் கட்சி புதிதாக வந்துள்ளது.

மதிமுக, இந்திய ஜன நாயகக் கட்சியுடன் பேசி கூட்டணியில் அவர்களை உறுதிப் படுத்திவிட்ட பாஜக நேற்று புதிய நீதிக்கட்சியுடன் பேச்சு நடத்தியது. பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலாயத்தில் இந்தசந்திப்பு நடந்தது. புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையிலான 3 பேர் கொண்டகுழு கலந்து கொண்டது. இதுமுதல் கட்ட சந்திப்பு என்று தெரிவித்த ஏசி சண்முகம், பேச்சுவார்த்தை குறித்தும் திருப்தி தெரிவிதார்.

Tags:

Leave a Reply