வணிகர்கள் ரூ.3 லட்சம்வரை கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் விதி முறைகளை கூறி வாகனசோதனை என்ற பெயரில் பறக்கும்படை கெடுபிடியால் சில்லரை வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷனின் இந்தசெயலால் தமிழகத்தில் வணிகம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

வணிகர்கள் எந்தவகையிலும் பாதிக்காத முறையில் வாகனசோதனையை தேர்தல் கமிஷன் நடத்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் வணிகர்கள் ஐம்பதாயிரம் வரை கொண்டுசெல்லலாம் என்பதை மாற்றி மூன்று இலட்சம் வரை கொண்டு செல்லலாம் என்று தேர்தல்கமிஷன் ஆணை பிறப்பிக்க வேண்டுகிறோம். வணிகர்கள் முறையான ஆவணங்கள் வைத்திருக்கும் பட்சத்தில், பணத்தைபறிமுதல் செய்யாமல் சோதனை செய்யும் இடத்திலேயே அவர்களை விடுவிக்க வேண்டுகின்றோம்… என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

Leave a Reply