சீன அதிபர் ஜின் பிங் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். மனைவி பெங்லியுயான் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், தொழிலதிபர்கள் கொண்டகுழுவுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்த அதிபர் ஜின் பிங்கை, குஜராத் மாநில ஆளுநர் மற்றும் முதல்மந்திரி ஆனந்தின் பென் படேல் வரவெற்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து அவரை வஸ்தி ராபூர் ஹயாத் ஓட்டலுக்கு அழைத்துசென்றனர். ஹயத் ஓட்டல் வந்தடைந்த சீன அதிபரை வாயில்வரை வந்து பிரதமர் மோடி வரவேற்றார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவிக்கு பூங்கொத்துகொடுத்து வரவேற்றார். இந்த சந்திப்பில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

Leave a Reply