பிரதமர் நரேந்திர்மோடி மனதின்குரல் நிகழ்ச்சியின் மூலம் இந்தமாதம் 28ம் தேதி மக்களிடையே வானொலி மூலம் உரையாற்ற உள்ளார்.

மாதாமாதம் நரேந்திர மோடி மங்கிபாத் என்கிற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலியில் மக்களிடையே நேரடியாக உரையாற்றிவருகிறார். கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த உரையில் மாணவர்கள், விவசாயிகள்,நலன் மற்றும் பல்வேறு தரப்பிலான தலைப்பில் உரையாற்றினார்.அதன்படி இந்த மாதம் தாம் உரையாற்றவேண்டிய விஷயம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் ஆலோசனையும் கேட்டுள்ளார்.ஆலோசனை அளிக்க விரும்பும் மக்கள் அவர் தமது டிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள இணையத்தள முகவரிக்கு வருகிற 26ம் திகதிக்குள் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது அவருடன் இணைந்து வானொலியில் மோடி உரையாற்றியது மிகச்சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாக இன்றுவரை பார்க்கப்படுகிறது.

Leave a Reply