இந்தியாவின் மோசமான மந்தமான பொருளாதார வளர்ச்சியும் பணவீக்கமும் மக்களை பெரும்பாடுபடுத்தி வருவதாக கேலப் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

கேலப் பைனான் சியல் வெல் பீயிங் இன்டெக்ஸ் (Gallup’s Financial Wellbeing Index) எனப்படும் மக்களின் மன நிலையை

வெளிப்படுத்தும் குறியீட்டுஎண் தொடர்பான கருத்து கணிப்பில் 3ல் ஒருஇந்தியர் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வெறுப்பில் உள்ளதாக தெரியவருகிறது .

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்களது பொருளாதார நிலை மோசமாகி உள்ளதாக 31% இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர் காலமும் இதே போன்று இருக்க போகிறது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் இவ்வாறு கருத்துதெரிவித்தவர்கள் எண்ணிக்கை 24% இருந்தது.

அதாவது 2011ம்_ஆண்டில் 4ல் ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக கூறியிருந்தார். இப்போது அது 3ல்_ஒருவர் என்ற அளவுக்கு மோசமாகி உள்ளது.

Leave a Reply