வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்திற்கு பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் கோவை, தேனி, ராம நாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 2 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றார். அவர் பதவியேற்றபின்னர் முதல் முறையாக வரும் 30 ம் தேதி சென்னை வருகிறார்.

தமிழகம்வரும் பிரதமர் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை வர உள்ள பிரதமருக்கு உற்சாகவரவேற்பு அளிக்கவும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

Comments are closed.