30 டிஎம்சி. தண்ணீரையாவது கர்நாடக அரசு உடனே வழங்கவேண்டும் கர்நாடக அரசு ஆண்டுக்கு 255 டிஎம்சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும், ஆனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் சம்பா பயிர்களை காக்க 52 டிஎம்சி. தண்ணீரைத் தான் தமிழக அரசு கேட்கிறது. அதில் 30 டிஎம்சி. தண்ணீரையாவது கர்நாடக அரசு உடனே வழங்கவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் :-

மேட்டுப்பாளையம வந்த அவர் மேலும் தெரிவித்ததாவது ; கடந்த 6ந் தேதி ஆர்எஸ்எஸ்.பிரமுகர் ஆனந்தின் மீது கொலை முயற்சிதாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கதக்கது. நகரசபை தலைவர் சதீஸ் குமாருக்கு எஸ்எம்எஸ். மூலம் கொலைமிரட்டல் விடுத்த நபரை காவல்துறை கைது செய்து விடுதலை செய்ததை கண்டிக்கிறோம .

சம்பா சாகுபடிக்காக தமிழகஅரசு கர்நாடகத்திடம் 52 டிஎம்சி. தண்ணீர் கேட்கிறது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீர்வழங்க மறுக்கிறது. ஆண்டுக்கு 255 டிஎம்சி. தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்கவேண்டும். தமிழகத்தில் இருக்கும் சம்பா பயிர்களைகாக்க 52 டிஎம்சி. தண்ணீரைத்தான் தமிழக அரசு கேட்கிறது.

பயிர்களை காப்பற்றுவதற்கு 30 டிஎம்சி. தண்ணீரை யாவது கர்நாடக அரசு உடனே வழங்கவேண்டும். இதை ஏற்கமறுக்கும் கர்நாடக அரசை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிறமாநிலங்களும் ஏற்றுக்கொள்ளாது. கர்நாடக அரசு நெற்பயிர்களோடு மட்டும் விளையாடவில்லை. விவசாயிகளின் உயிரோடும் விளையாடுகிறது. எனவே கர்நாடக அரசு உரிய நதி நீரை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்

Leave a Reply