டில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மின்சார கட்டணம், 30 சதவீதம் ரத்துசெய்யப்படும்; ஆட்சிக்குவந்த 30 நாட்களுக்குள், காய்கறி விலையை குறைப்போம் என்று பா.ஜ., வெளியிட்டுள்ள, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டில்லியில் , மாநில, பா.ஜ.க, தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராஜ்ய சபா எதிர்க் கட்சி தலைவர், அருண்ஜெட்லி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர், சுஷ்மாசுவராஜ், பா.ஜ.வின் முதல்வர் வேட்பாளர், ஹர்ஷ வர்த்தன், டில்லி மாநில தலைவர் விஜய்கோயல் உள்ளிட்டோர் , நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:

* ஆட்சிக்குவந்ததும், தற்போதுள்ள மின்கட்டணத்தில், 30 சதவீதம் வரை ரத்துசெய்யப்படும்.
* விண்ணைத்தொடும் அளவுக்கு, உயர்ந்துள்ள காய்கறிவிலையை, 30 நாட்களுக்குள் குறைப்போம்.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஆண்டுக்கு, 12 சமையல்காஸ் சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படும்.
* டில்லியிலேயே பிறந்துவளர்ந்த, ஒவ்வொரு குடிமகனுக்கும், 25 வகைமருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.
* மாலை நேர நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* முஸ்லிம்களுக்கு மதரசா ஆணையம் அமைக்கப்படும்.
மேலும் 70 தொகுதிகளுக்கும், தனி தனி 70 தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படும் என்று முதல்வர் வேட்பாளர், ஹர்ஷ வர்தன் கூறினார்.

Leave a Reply