அடுத்த இரண்டு வருடங்களில் , தினமும், 30 கிமீ., நெடுஞ்சாலைகள் அமைக்க, மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது,’ என, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் கூறியதாவது: நிலம் கையகப்படுத்துவது, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெறுவது போன்றவற்றில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் முடங்கியுள்ளன.

அடுத்த மூன்றுமாதங்களில், சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதலுடன், சாலைப்பணிகள் மீண்டும் துவங்கும். ஒரு சிலபணிகள், ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் முடிவடையும். தற்போது, தினமும் சராசரியாக, 3 கிமீ., சாலை போடப்படுகிறது. இதை, அடுத்த இரண்டு வருடங்களில் , 30 கிமீ., ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்

Tags:

Leave a Reply