அசாம் கலவரத்தை தொடர்ந்து, வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று எஸ்எம்எஸ்., மூலமாக வதந்தி பரப்பப்பட்டது. இதைதொடர்ந்து மத்திய அரசு எஸ்எம்எஸ்.,களுக்கு கட்டுப்பாடுகலை விதித்தது. இதனால் தொலைத் தொடர்பு
நிறுவனங்களுக்கு ரூ. 300 கோடி வரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.