அண்மையில் நடந்த 5ந்து மாநில சட்ட பேரவை முடிவுகளை கவனித்தால், 300 இடங்களில் பா.ஜ.க வெல்வது உறுதி என பாஜக.,வின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடந்த பா.ஜ.க மாநிலசெயற்குழு கூட்டத்தை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:

கர்நாடக சட்டப் பேரவையில் பா.ஜ.க தோல்வி அடைந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருக்க தேவையில்லை. மக்களவைதேர்தல் பணியில் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். 2014ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைக்கும். இந்தியாமுழுவதும் பா.ஜ.க.,வுக்கு ஆதரவான அலை வீசுகிறது. 272 இடங்களை கைப்பற்றுவது பா.ஜ.க.,வின் இலக்கு. ஆனால், அண்மையில் நடந்த 5 மாநில சட்டப்பேரவை முடிவுகளை கவனித்தால், 300 இடங்களில் பாஜக வெல்வது உறுதி.

நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சியை மையப்படுத்தி மக்களவை தேர்தல்பிரசாரம் நடைபெறும். பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்வோம். அடல்பிகாரி வாஜ்பாய் அளித்த நல்லாட்சியைபோல வேறு எந்த கட்சியின் ஆட்சியும் நடைபெறவில்லை. மக்களவை சாதி, மதத்தின் அடிப்படையில் பிளவுப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பாஜக அல்ல, காங்கிரஸ்தான் மதவாதக் கட்சி என்றார் .

Leave a Reply