தயாநிதி மாறன் விட்டிற்கு சட்டவிரோதமாக கொடுக்கபட்ட 300 க்கும் அதிகமான தொலைபேசி இணைப்புகள் தொடர்பாகவும் சன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இந்தஇணைப்புகள் பயன்படுத்தபட்டது குறித்த விவரங்களை தருமாறு தொலைபேசி துறையிடம் சிபிஐ., கேட்டுள்ளது.

கடந்த வாரம் இதுகுறித்து விசாரணையை துவக்கிய சிபிஐ, தயாநிதி மாறன் வீட்டிற்கு ஐஎஸ்டி என் இணைப்புகள் தரப்பட்டது தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளது. தயாநிதி வீட்டிற்குத்தரப்பட்ட இந்தஇணைப்புகள் சன் டிவி_நிறுவனத்துடன் இணைக்கபட்டது தொடர்பான தொழில் நுட்ப விவரங்களையும் சிபிஐ கேட்டுள்ளது.இதன் மூலம் தயாநிதி மீதான சி.பி.ஐ. யின் பிடி நாளுக்கு நாள் இருகிவருகிறது என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply