வேஷ்டி சட்டை அணிந்து மதுரைவந்த பிரதமர் மோடி, நேரராக மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமிதரிசனம் செய்தார்.

இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி வந்த தனிவிமானம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. விமான நிலையத்தில் பாஜக மற்றும் அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழர் பாரம்பரியபடி வேஷ்டி, சட்டை மற்றும் துண்டுஅணிந்து ‘மதுரை வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து சாலைமார்க்கமாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு காரில் வந்தார்.

அங்கு பச்சைதுண்டை தோளில் போட்டபடி வந்திறங்கியவர்,மக்களை பார்த்து சிறிதுநேரம் கையசைத்தார். உற்சாகத்துடன் கோயிலுக்குள் சென்றவர் மீனாட்சியம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் கும்பமரியாதை அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர், பிரதமர் மோடி நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.

சீன அதிபரின் வருகையின்போது மாமல்லபுரத்தில் வேட்டி, சட்டையுடன் வந்த பிரதமர் மோடி அதன்பிறகு தற்போதுதான் அதேபாணியில் வேஷ்டிசட்டை அணிந்து வந்திருந்தார். பிரதமர் மோடி மதுரை வரும்போதே வேஷ்டி சட்டையில் வந்திறங்கியதை பார்த்த பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்..

Comments are closed.