பெட்ரோலின் விலையை ஒரேயடியாக வரலாறு கணாத அளவுக்கு லிட்டருக்கு ரூ .7.50 க்கு மேல் உயர்த்தி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசைக்கண்டித்து இம் மாதம் 31ம் தேதி (வியாழக் கிழமை) “”பாரத் பந்த்” நடத்தபடும் என பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.

பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஐக்கிய முற்போக்கு_கூட்டணி அரசை கண்டித்து “பாரத் பந்த்” நடை பெறும் என தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் தலைவர் எல்.கே. அத்வானி தில்லியில் அறிவித்தார். கூட்டணியின் அமைப்பாளர் சரத் யாதவ் இதை வழிமொழிந்தார்.

இந்தமுடிவை எடுப்பதற்க்கு முன்பு கூட்டணியின் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டது. பாரத் பந்தில் கலந்துகொள்ளுமாறு கேட்க அ.இ.அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளையும்_அணுக தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

Leave a Reply