செம்மரம் கடத்தியதாக கூறி 32 தமிழர்கள் மீது ஆந்திர அரசு பொய்வழக்கு போட்டிருப்பதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். 70-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் சங்கரலிங்கனார், செண்பகராமர் உள்ளிட்டோரின் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர் ஆந்திர எல்லையோர கிராம மக்களின் வறுமையை பயன்படுத்திக்கொள்ளும் இடைத்தரகர்கள், அம்மக்களை தவறான செயல்களுக்கு பயன்படுத்தி கொள்வதாக குறிப்பிட்டார்.

இது தடுக்கப்பட தமிழகஅரசு இவ்விகாரத்தில் தனிகவனம் செலுத்தவேண்டும் என கோரியவர், ஆந்திர எல்லையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடுகளை செய்யவும் கேட்டுக்கொண்டார். சுதந்திர தினத்தை 15 நாட்கள் கொண்டாட பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் உள்ள தியாகிசிலைகள் மற்றும் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் விரைவில் தமிழகம் வர உள்ளதாக கூறினார்.

Leave a Reply