அன்னிய நிதி_நிறுவனங்கள், நவம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் ரூ.3,200 கோடி நிகர மதிப்பிற்கு முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அம்மாதத்தில் மொத்தம் ரூ.62,296.10 கோடிக்கு பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை வாங்கியுள்ளன. மொத்தம்

ரூ.65,559.20 கோடிக்கு இவற்றை விற்பனை செய்துள்ளன. இதனையடுத்து இந்நிறுவனங்களின் நிகர விற்பனை ரூ.3,200 கோடியாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி மற்றும் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்னிய நிதி நிறுவனங்கள் தமது முதலீடுகளை அதிக அளவில் விலக்கிக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply