அனுமதி பெறாமல் நிதிச்சேவையில் ஈடுபட்டுள்ள 34 ஆயிரம் நிறுவனங்களை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக நிறுவனங்கள் விவகாரத் துறைக்கான மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் செவ்வாய்க் கிழமை எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் கூறியது: நிறுவன விவகாரங்கள் துறைக்கு ரிசர்வ்வங்கி அனுப்பியுள்ள பட்டியலில் மொத்தம் 34,754 நிறுவனங்கள் உள்ளன. இவை வங்கியல்லாத நிதிநிறுவனங்களாக நிதிச்சேவையில் ஈடுபடுகின்றன. ஆனால் இவை ரிசர்வ் வங்கியிடம் இதற்கான லைசென்ஸைப் பெறவில்லை .

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் விதிகளைமீறி பொது மக்களிடமிருந்து டெபாசிட்டுகளைத் திரட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிட்பண்ட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பல்வேறு விதிகளில் உள்ள சாதக அம்சங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இருப்பினும் சிறிய முதலீட்டாளர்களின் நலனை காப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் எடுத்து வருகிறது

முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது, புதிய நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை தெரிவிக்க வேண்டியதை கட்டாய மாக்குதல் மற்றும் சுதந்திரமான தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Leave a Reply