பாரதத்தின் இளைய தலைவர், எதிகால நம்பிக்கை நட்ச்சத்திரம், எதிர் கால பிரதமர் என காங்கிரஸ் காரர்களால் வாய்க்கு வாய் கூறப்படும் ராகுல், பார்லிமென்டில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 35 நாட்களில் 22 நாட்கள் சபை நடவடிக்கைகளிலேயே கலந்து கொள்ளவில்லை.

35 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்ட தொடரில் 13 நாட்களே சபைக்கு வந்திருக்கிறார் . ரயில்வே பட்ஜெட் , மத்திய பட்ஜெட், என்று சபையின் எந்த விவாதங்களிலும் பங்கு பெறவில்லை. சோனியா காந்தியோ 16 நாட்கள் சபைக்கு வரவில்லை. ஆனால் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபாவின் அனைத்து நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று 100 சதவீத வருகையை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply